டிசம்பர் 30,
2014
இனிமையான பாபாவுடன் அதிருஷ்ட நட்சத்திரம் சம்பாஷணை
செய்கின்றார்.
முதல் விழிப்புணர்வு:
கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான் உணர்ந்து
பார்க்கின்றேன்.
“நான் ஓர் ஆத்மா. நான் ஒளியாலான
இனிமையான வீட்டிலிருந்து,
உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக
கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”
நான் யார்?:
நான் ஒர் அதிருஷ்ட நட்சத்திரம் ஆவேன். கடவுளே
என்னுடைய மகிமையை பாடுகின்றார். முழு உலகிற்கு
நான் ஒர் துருவ நட்சத்திரம் ஆவேன்.
நான் யாருக்கு சொந்தமானவன்?
ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா
உங்களுக்கு காலை வணக்கம். உங்களுடைய சகவாசத்தில்
நான் இருக்கும்போது,
அதிந்திரீய சுகத்தை நான் அனுபவம் செய்கின்றேன்.
உங்களுடைய சகவாசத்தில்,
மந்தமாக இருந்த நான் மின்னும் நட்சத்திரம்
ஆகியிருக்கின்றேன்.
பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான
குழந்தாய்,
விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள்.
அதிருஷ்ட நட்சத்திரமாக இருப்பதன் சந்தோஷத்தில் நீ
இருக்கும்போது, அனைத்து
துக்கமும் உன்னை விட்டு விலகிவிடும். அமிர்த
வேலையில் உன்னுடைய இதயம் என்னும் கண்ணாடியில்
உன்னை நீ பார். இந்த நேரத்தில் உன்னுடைய
ஜொலிக்கும் அதிருஷ்டத்தையும் உயர்ந்தோங்கும்
எதிர்காலத்தையும் மீண்டும் மீண்டும் பார்.
அகத்தூண்டுதல் பெறுவது:
என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான
பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில்
பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான
எண்ணங்களை பெறுகின்றேன்.
பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:
என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான
பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த
அன்புடன்,
சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம்
பாபா எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:
அந்த ஒருவருக்கே உரிய அன்பில் ஜோலிக்கும் தூய
இதயத்தோடு நீ சேவை செய்கின்றாய். இந்த
தூய்மையினால்,
கவர்ச்சிகளையும் கர்ம பந்தங்களையும் கடந்து,
உலக மேடையில் அற்புதங்களை
நிகழ்த்துகின்றாய்.
எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):
பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு
என்னுடைய தேவதை ஆடையில்,
உலகை வலம் வந்து,
முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும்
என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை
பரிசாக அளிக்கின்றேன்.
உறங்குவதற்கு முன்பு :
சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான்
நிலை பெற செய்து,
மனதளவில் சோதிக்கின்றேன்:
இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது
பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா?
அப்படி இருந்தால்,
நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன். நான்
எதற்கு பலியானேன்
–
மனதளவில் அல்லது ஸ்தூலமாக
–
கவர்ச்சி,
பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு
செய்தேனா?.
என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன்.
மேலும்
30
நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான
செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன். சுத்தமான
தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.