ஏப்ரல் 27, 2015
எனது சிறந்த நண்பர்
தாதி ஜானகி
எப்போதும் எனக்கு அதிகமான அன்பு மற்றும்
மரியாதையைக் கொடுத்துள்ளார். தாதி முதல் முறையாகப்
பிரேசில் வந்த போது, அவரை விமான நிலையத்தில்
வரவேற்று, "பாபா, என்னை உருவாக்கியது நீங்கள்",
என்ற இந்தப் பாடலை நாங்கள் பாடினோம். அது
முதற்கொண்டு, தாதி என்னை இந்தப் பாடலை பாடசொல்லி
பல முறை கேட்டுக்கொண்டார், பல முறை நானும்
மதுபனிலும் இந்தப் பாடலை பாடியிருக்கின்றேன். அவர்
எப்போதும் நம்முடைய அன்பான வெளிப்பாடுகளைப்
பாராட்டியிருக்கின்றார். தாதி முதல் முறையாகப்
பிரேசில் பயணம் மேற்கொண்டபோது, தாதி கேட்டார்:
“யார் உங்களைத் தீவிரமாக யோகம் மற்றும் முரளி
கருத்துக்களை உட்கிரகிக்கும் பயிற்சியில்
ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றீர்கள்”. நான்
அவருக்கு, ஆம், என்று பதில் கூறினேன். ஏனெனில் அவர்
எங்களுக்கு, ஓர் உயர்ந்த ரூபத்தில் சேவையில் உதவ
வேண்டும் என்று ஊக்கம் அளித்தார். (நான் அப்போது
50 வயதை நிறைவு செய்திருந்தேன்) நான் மதுபன்
சென்று இருந்தபோது, தாதி பிரேசிலை சார்ந்தவர்களுடன்
ஓர் அழகான ஒன்றுகூடலை கொண்டிருந்தார். அப்போது
அவர் என் குணங்கள் பற்றி எனக்கு ஆசிகள் வழங்கினார்.
இஃது என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு பெரும்
ஊக்கமளித்தது. (நான் அப்போது 57வயதை நிறைவு
செய்திருந்தேன்) மற்றொரு மதுபன் பயணத்தில், நான்
தாதியின் சிறந்த நண்பர் என்று கூறினார். இறுதியில்
நான் தரிசனங்களின் அனுபவங்களைக் கொடுக்க வேண்டும்
என்று என்னை ஆசீர்வதித்தார். தாதியின் இந்த
நல்வாழ்த்துக்கள், எனக்கு எப்போதும் முழுமையான
நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கின்றது.
என் வாழ்க்கைக்கும் ஆன்மீக சேவைக்கும் இப்படிபட்ட
ஒரு தெய்வீக கருவியைக் கொடுத்ததற்கு நான்
பாபாவிற்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
விவேகத்தின்
வார்த்தைகள்
இப்போது, நாம்
எவ்வாறு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும்?
அதிகமான அன்பு மற்றும் மரியாதையுடன் ஆகும். நீங்கள்
இந்தப் பார்வையோடு அனைவரையும் பார்க்கின்றீர்களா?
இந்த வகையான திருஷ்டியின் மூலம் பார்ப்பதால் உங்கள்
முகம் மலர்வது மட்டுமின்றி, நீங்கள் மற்றவர்களின்
முகங்களையும் மலரச்செய்வீர்கள்!
நீங்கள் உண்மையில்
மிக நல்லவர்கள் ஆக வேண்டும் என்றால், என்னால்
என்னையே நேசிக்க முடிய வேண்டும். ஒருபோதும்
சுயத்தை நேசிப்பதில் சோர்வாகாதீர்கள். நான் என்னை
நேசித்து மதிக்கும்போது, என்னால் மற்றவர்களையும்
நேசித்து அவர்களுக்கு மரியாதை வழங்க முடியும்.
உங்களுடைய வாழ்க்கை, ஒரு தரம் வாய்ந்த வாழ்க்கையாக
இருக்கும்போது, உங்களால் கடவுளிடமிருந்து பெரும்
அன்பை அனுபவம் செய்ய முடியும். நீங்கள்
மற்றவர்களிடமிருந்தும் அன்பை அனுபவம் செய்வீர்கள்.
நாம் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த விஷயங்களைப் பயிற்சி செய்யும்போது, உங்களுக்கு
எப்போது எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய
வேண்டும் என்று தெரியும்.
அனைவருக்கும் அன்பு
தேவைப்படுகின்றது. விலங்குகளுக்கும் கூட அன்பு
தேவைப்படுகின்றது. நான் வருத்தப்படவேண்டிய எந்த
நடவடிக்கைகளையும் நான் செய்ய வேண்டாம். கடவுள்
என்னுடைய நண்பர், அனைவரும் என்னுடைய நண்பர்கள்,
இந்த விழிப்புணர்வுவைக் கொண்டிருக்கும்போது, இந்த
வாழ்க்கை மிகவும் உயர்ந்த வாழ்க்கை ஆகின்றது.
மேலும் இந்த விழிப்புணர்வுவை வளர்த்துக்கொள்ள அதிக
நேரம் எடுக்கவில்லை. இஃது ஓர் அதிசயம்! நான்
என்னுடைய எண்ணங்களை உண்மையாகவும் நேர்மையாகவும்
வைத்துகொள்ளும் போது, பொறுமை மற்றும் இனிமை
உள்ளிருந்து வெளிப்படுகின்றன. அதன் பின்னர்
ஆத்மாவில் இலேசான தன்மை இருக்கின்றது, ஏனெனில்
ஆத்மா அதன் முயற்சிகளில் வெற்றிப் பெற்றுவிட்டது.
இந்த நிலையை அடைய, உங்கள் முயற்சி சீராக இருக்க
வேண்டும்.
மற்றவர்களுக்கான
நல்வாழ்த்துக்கள் அதிசயம் போன்று வேலை செய்யும்.
மற்றவர்களுக்காக நல்வாழ்த்துக்கள் வைத்திருங்கள்,
நீங்கள் அவர்கள் மாற்றமடைவதற்கு வாய்ப்பு
கொடுக்கின்றீர்கள். நல்வாழ்த்துக்களுடன் முடியாத
காரியமும் முடியும். முடியாததை முடியவைக்க
நம்பிக்கை தேவைப்படுகிறது. தைரியம், நம்பிக்கை
மற்றும் தூய உணர்வுகள், என்னுடைய சொந்த உற்சாகம்
மற்றும் போதையை அதிகரிப்பது மட்டும் இல்லாமல்,
மற்றவர்களுக்கும் அஃது ஒரு பெரிய அளவில் உதவி
செய்கின்றது.
திருஷ்டிக்கான
கருத்து
பாபா என்னுடைய
சிறந்த நண்பர் என்பதை நான் அறிவேன், மேலும் அவருடன்
இந்த இணைப்பை நான் கொண்டிருக்கும்போது, என்னால்
அனைவருக்கும் நண்பனாக இருக்கமுடியும். அவர்களுக்கு
வலிமை மற்றும் ஊக்கம் கொடுக்க முடியும். நான்
அனைவருக்குமான தூய பார்வையின் சக்தியோடு என்னை
இணைத்துக்கொண்டு, நான் சந்திக்கும் ஒவ்வொருவரின்
பங்கையும் நான் பாராட்டுகிறேன்.
கர்மயோகக் கருத்து
நான், ஆத்மா,
என்னுடைய சொந்த குணங்களில் நான் நம்பிக்கை
கொண்டிருக்கின்றேன், மேலும் கடவுள் எனக்குக்
கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை உணர்ந்து
பார்க்கின்றேன், சக்தி மற்றும் தைரியத்தால் என்னை
நிரப்பிக்கொள்கின்றேன். நான் இன்று மேற்கொள்ளும்
ஒவ்வொரு பணியிலும், நான் வெற்றி பெறுவேன், மேலும்
வெற்றியை உணர்வேன் என்பது எனக்குத் தெரியும்.