Home

Diamond Dadi

Contact Us



மார்ச் 30, 2015

சுய மரியாதை கொண்டிருப்பது

அது பிப்ரவரி 2002 ஆம் வருடம். நான் மதுபனிற்குச் செல்லும் என் வழியில் அகமதாபாத் வந்திருந்தேன். தாதி ஜானகி ஜியும் ஒரு சில மணி நேரம் கழித்து Lotus House வந்தார்கள். அவர்கள் எங்களோடு பேசுவதற்கு அமர்ந்திருந்தார்கள். தாதிஜி தமிழகத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் அங்கு வந்திருந்தார். அப்பொழுது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு சம்பவம் எங்களைத் திகைக்க வைத்துவிட்டது.

அவர் மதுரையில் தங்கியிருந்த போது, தெய்வீக குடும்பம் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். அந்தக் கோவிலில் அனைத்து விதிகளும் தொடர்ந்து எவ்வாறு கடைப்பிடிக்கின்றார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்; அனைத்து மதக் கோட்பாடுகளையும் கடுமையாகப் பின்பற்றும், நியமிக்கப்பட்ட குருக்கள் மட்டுமே பூஜை செய்யக் கருவறைக்குள் செல்ல முடியும். தாதிஜியும் உள்ளூர் பி.கே. சகோதரிகளும் சேர்ந்து ஆலயத்திற்குள் நுழைந்த போது, பூசாரி தாதியைப் பார்த்து, மூலஸ்தானத்திற்கு அவரை அழைத்தார்! அவர் தெய்வத்திற்கு 'ஆர்த்தி' எடுத்தபிறகு, தாதிஜிக்கு 'ஆர்த்தி' எடுத்தார். தாதிஜிக்கு அது ஆச்சரியமாக இல்லை; அது அவரின் நினைவு சின்னம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாதிஜி இதை மிகச் சாதாரண முறையில் விவரித்தார். இது அவர், நாடகத்தில் எவ்வளவு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள் என்றும் எவ்வளவு சுய மரியாதையில் இருக்கின்றார் என்பதையும் புரிய வைத்தது. இந்தச் சமஸ்காரம் ஒருவரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு மிக முக்கியப் பங்கு வகுக்கின்றது. தாதிஜிக்கு நன்றி.

விவேகமான வார்த்தைகள்

நம் ஒவ்வொருவரும் நம்முடைய சுய மரியாதையின் விழிப்புணர்விலும் விழிப்புநிலையிலும் இருப்பது அவசியமாகும். உங்கள் சுய மரியாதையில் இருப்பதற்கு, ஒரு உண்மையான இதயம் மற்றும் ஒரு பெரிய இதயத்தை வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு உண்மையான மற்றும் பெரிய இதயம் கொண்ட ஒருவரால் ஒவ்வொரு அடியிலும் சேவையாற்ற முடியும். அவர் என்ன பணி செய்கிறார் என்பது ஒரு விஷயம் இல்லை, அவர் அதன் பலனை பெருகின்றாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவரது சுய மரியாதையில் அவர் இருப்பார். அப்படிபட்ட ஒரு குழந்தை, எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் அவருடையது - என்று ஒரு நம்பிக்கை பொறுப்பாளராகப் பாபாவின் சேவையைக் கவனித்துக் கொள்வார் என்பதைப் பாபா அறிவார்.

உண்மை மற்றும் சுத்தமாக இருப்பதன் மூலம் நான் ஒரு தேவதை ஆகின்றேன், அதன் பின்னர் ஒரு தெய்வம் ஆகின்றேன். மனம் இந்த நிலையை அடையும் போது, ஒருவரால் உடல் மற்றும் உடல் உறவுமுறைகளை கடந்து இருக்க முடியும். அதன்பின்னர் அவருடன் பாபா இணைந்திருப்பார் மற்றும் சுற்றுசூழல் நன்றாக இருக்கும்.

நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவத்தைக் கொண்டிருக்கும் போது உங்களால் சாக்காஷ் கொடுக்க முடியும். சிறிதளவு பற்று இருந்தால் கூட, உங்களால் சேவை செய்ய முடியாது. உங்கள் மனோபாவத்தின் அதிர்வுகள் வெகுதூரமும் அகன்ற முறையிலும் பரவுகின்றது. என்ன சேவை இருந்தாலும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும், இதை விட வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும் அங்குச் சேவை இருக்கிறது. நீங்கள் 'சரி' பாபா என்று சொல்லும் போது, பாபா அங்கு ஆஜராகின்றார். உங்களுக்கு இதற்கு உண்மையும் பணிவுத்தன்மையும் வேண்டும். பாபா போன்ற ஆணவமற்று, விகாரமற்று, நிராக்காரமாக இருங்கள் - அதன்பிறகு உங்களால் ஒரு உண்மையான இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க முடியும்.

திருஷ்டிக்கான கருத்து

நான் என் மீது தூய பார்வையைப் பயிற்சி செய்கின்றேன். நான் என்னை ஒரு தெய்வீக குணங்கள் நிறைந்த பிரகாசிக்கும் தெய்வமாகப் பார்க்கிறேன். என்னை நான், கடவுளின் தூய படைப்பாக, அதிசயிக்கதக்க, நேர்த்தியான அழகின் ஒளிகொண்ட, மனிதர்களில் மிக உயர்வானவராகப் பார்க்கிறேன்.

கர்மயோக பயிற்சி

நான் கர்மஷேத்திரத்தில் நடக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும், நான் ஒரு புனிதமான ஒளி பொருந்திய, தேவதை உடலில் இருக்கின்றேன், தத்துவங்களையும் இந்தக் கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவின் இதயங்களையும் பரிசுத்தமாக்குகின்றேன் என்ற விழிப்புணர்வில் நகர்ந்து செல்கின்றேன்.