BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY |
ஓம் சாந்தி
தாதி ஜானகி வகுப்பு – 1 மார்ச் 2015 – தியான மண்டபம், பாண்டவ பவன்
(ஞானத்தில் 35-மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இருக்கும் இரட்டை வெளி நாட்டவர்களின் ஒன்று கூடல்)
நீங்கள் அனைவரும் அன்பினால் பிறந்தவர்கள் இல்லையா? நீங்கள் சந்தோஷமாகவும் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது சோகமாகவோ, மன உளைச்சலில் அல்லது தொந்தரவை அனுபவம் செய்கின்றீர்களா? இது போன்ற ஒரு ஒன்று கூடல் இதுவரை இருந்ததில்லை? யார் இதை திட்டமிட்டது? (சர்வதேச குழுவினால் ஒரு வருடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது).
நீங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள். உங்களை நீங்கள் அறிவீர்கள். பாபாவிற்கு உங்களை தெரியும் நானும் உங்களை அறிவேன்…, பாபா எங்களை ஒருபொழுதும் சிந்தியில் பேச அனுமதித்ததில்லை. அப்படி என்றால் நாங்கள் அதிகமாக பேசுவோம் என்று பாபா கூறினார். பாபா மற்ற விஷயங்களை பற்றியும் பழைய விஷயங்களை பற்றியும் நாம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். யாராவது இந்த விஷயங்களை பேசினால், அவர்கள் மதிய உணவு சாப்பிட கூடாது என்று பாபா கூறிவிடுவார். நாம் வீனான காரியங்களை பற்றி கேட்கவும் பேசவும் கூடாது. எது முக்கியமோ அதை பற்றி மட்டும் பேச வேண்டும்.
நாம் சேவை செய்யும் போது, பாபா சக்தியையும் அன்பையும் கொடுக்கின்றார். ஒன்று (strength) பலம் எனப்படுவது, மற்றொன்று (power) சக்தி எனப்படுவதாகும். (Energy) ஆற்றல் என்பதும் இருக்கிறது. எனக்கு (energy) ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது என்று மக்கள் என்னை கேட்கின்றார்கள்.
பாபாவை ஒரு நண்பராக நினைவு செய்ய தீதி எனக்கு கற்பித்தார். அவர் என் நண்பர் மற்றும் என் கணவரும் ஆவார். நாம் “பாபா என்னுடையவர்” என்று பாபாவை நினைவு செய்ய வேண்டும்; என்னுடைய தாய், என்னுடைய தந்தை………..பக்தியின் பாதையில், நீங்கள் என்னுடைய தாயும் தந்தையும் ஆவீர்கள், நாங்கள் உங்களுடைய குழந்தைகள், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று பாடினோம். நீங்கள் தான் அதி உயர்ந்த கடவுள் ஆவீர்கள். உண்மையில் நமக்கு அவரை பற்றி தெரியவில்லை, ஆனால் இப்போது நாம் அவரை அறிவோம். அவர் கடவுள் - பாக்கியத்தை அருள்பவர்.
இப்போது சிந்தியுங்கள்: நான் யார்? நான் யாருக்கு சொந்தம்? நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? இது இரகசியமான விஷயங்கள் ஆகும் - இருந்தாலும் நாம் அறிவோம். நாம் இப்போது செய்ய வேண்டிய அனைத்தும் முரளி கேட்க வேண்டியதுதான். தோளி சாப்பிடுங்கள், தூய்மை ஆகிடுங்கள். யார் அனைத்தையும் செய்கின்றார்கள்? அவர் எல்லாவற்றையும் செய்கிறார், அதன்பிறகு தன்னை தானே மறைமுகமாக வைத்திருக்கின்றார்.
நான் வெளிநாடுகளுக்கு சென்றேன்: பாபா தேடினார், விசேஷமான ஆத்மாக்களை கொண்ட ஒரு மாலையை உருவாக்கினார், மேலும் அதை அவர் தம் மடியில் வைத்துக்கொண்டார். ரஜினி பென் (ஜெயந்தி பென் தாயார்) மிகவும் விசேஷமான ஆத்மா ஆவார். (யாரோ ஒருவர் கூறினார்: அவர் இரட்டை வெளிநாட்டினரை கண்டுபிடிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றார்)
இப்போது கவனம் செலுத்துங்கள். பாபா சொல்வதை கேள்ளுங்கள். ஒருபொழுதும் சப்தமாக பேச வேண்டாம். முரளியை பொறுத்தவரை யாராவது ஏதாவது தவறாக பேசினாலும், நாம் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது தவறாக எதுவும் பேசினாலும், நீங்கள் இனிமையாகவும் அன்பாகவும் இருங்கள்…. இதுவே பாபாவின் போதனைகள் ஆகும்.
இன்று நான் பாபாவின் அறைக்கு சென்றேன், உங்களில் பலர் அங்கு அமர்ந்திருந்ததை பார்த்தேன். நான் பாபாவின் ஆழமான நினைவை உணர்ந்தேன். பாபாவின் எத்தனை எத்தனை குழந்தைகள் வந்திருக்கிறார்கள்……... பல அஸ்திவாரமான ஆத்மாக்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை நாம் கல்ப மரத்தின் கீழ் காட்ட வேண்டும்!
நாம் இது போல் மீண்டும் சந்திக்க போகின்றோமா? நான் அப்படி நினைக்கவில்லை...
ஓம் சாந்தி
|