தாதி ஜானகி - 24 பிப்ரவரி 2015 – சாந்திவன்
ஆன்மீக அன்பு ஈர்கின்றது...
நான் இதயபூர்வமான விஷயங்களை கூறுகிறேன். என் இதயத்தில், என் மனதில், என் புத்தியில், என் நினைவோட்டத்தில் மற்றும் என்னுடைய சுபாவத்தில் இருப்பது யார்? ஆழமாக சிந்திப்பது மற்றும் அக்கறை அல்லது கவலைக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? உங்கள் நினைவோட்டத்தில் அல்லது chit-ல், உள்ளவற்றை தெளிவுபடுத்த, ஆத்மா என்பது உண்மை, (aware) விழிப்புடன் இருப்பது மற்றும் ஆனந்தமாக இருக்கிறது என்பதும் ஆகும். என்னுடைய சிந்தனையில் இருப்பது, நினைவோட்டத்தை அல்லது chit-ல், செல்லும். அதனால் எது உண்மையோ அது என்னுடைய சிந்தனையில் இருக்கும். நான், சிந்திக்கவேண்டும், யோசனை செய்யவேண்டும், கருத்தில் கொள்ளவேண்டும் மற்றும் கருத்தை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த அனைத்தும் என் விழிப்புணர்வில் இருக்கும். மேலும் இறுதி எண்ணங்கள் என் விழிப்புணர்வில் இருக்கும். மனோபாவம் என்பது அதற்கு ஏற்றவாறு இருக்கும், என்னுடைய திருஷ்டியும் அதை பொறுத்து இருக்கின்றது. மனதின் மனோபாவமானது நினைவோட்டத்தில் இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த பாகங்கள் உள்ளது. இதை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் இதயத்தையும் மனதையும் அமைதியாக சப்தமின்றி வைத்திருங்கள். ஆழமாக உள்ளுக்குள், பாசமும் ஆன்மீக அன்பும் இருக்கிறது. ஆன்மீக அன்பு ஈர்க்கின்றது. அனைவரும் இங்கு இருக்கின்றார்கள், எவ்வாறு அனைவரும் வந்தார்கள் என்பதை பற்றி நான் அறியமாட்டேன்! யாருக்கு அன்பு சந்திப்பின் அனுபவமும் அன்பு அதிர்வுகளின் உணர்வும் உள்ளது? பாபா உண்மையை பேசுகின்றார், நாம், அவற்றை நமது புத்தியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாபா என்ன கூறுகின்றார் என்ற விழிப்புணர்வு மட்டுமே உள்ளது. பாபா பரமாத்மா ஆவார். ஆத்மா பிரமாத்மாவிடம் செல்கிறது. ஒவ்வொரு நாளும் நான் இரண்டு முறை முரளி படிகின்றேன். முழு முரளியும் என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் வந்துவிட்டது. அது என் வாழ்க்கையில் இருக்கும்போது தான் நான் அதை மற்றவர்கள் வாழ்கையில் கொண்டுவர ஊக்குவிப்பு அளிக்க முடியும். நினைவில் நிலைத்திருப்பது என்றால், நாம் வேறு எதையும் நினைவு செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். நான் அமைதியாக சப்தமின்றி இருந்து, ஆழமாக செல்கின்றேன். நான் மற்ற விஷயங்களை நினைவு செய்யவில்லை. பாபா அற்புதமானவராக இருக்கின்றார், பாபாவின் குழந்தைகள் அற்புதமானவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நான் பார்க்கிறேன். இப்போது பாபாவிற்கு பல இடங்கள் உள்ளன. புனாவிலிருந்து நாம் உலகில் சேவை செய்ய சென்றோம். எல்லா இடங்களிலும் என் கால்களை வைக்க நான் நேரம் பெற்றேன். அனைத்து சேவையையும் அதிகமான சந்தோஷத்தோடு பார்த்துக்கொள்ளும் பல சகோதர சகோதரிகளும் நம்மிடம் இருக்கிறார்கள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாத நிலையில் என் உடல்நலம் உள்ளது. மாலை வேளைகளில் வகுப்பிற்கு வந்து குடும்பத்தை சந்திக்க மிகுதியான ஈர்ப்பு உள்ளது. வேறு எந்த உணர்வும் இல்லை. யாருக்கும் முன் அறிவிப்புகள், போதனைகள் அல்லது எச்சரிக்கைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் திருஷ்டி கொடுக்கின்றேன். எல்லோரையும் பார்க்க முடிகின்றது, இந்த அன்பு நிறைந்த சந்திப்பானது என் இதயத்தில் ஆழமான அன்பாக ஊடுருவுகின்றது. இது தான் வாழ்க்கை பற்றி எனது அனுபவம். பாபா பகிர்ந்துகொண்ட அனைத்தும் என் இதயத்தில் இருக்கிறது. அது ஒர் அதிசயம்.
சேவை என்பது நான்காவது தூண். முதலில் ஞானம், பின்னர் யோகம். ஆத்மா பற்றிய ஞானம் நாம் லேசாக ஆவதற்கும் உடலிலிருந்து தனித்து இருப்பதற்கும் உதவுகிறது. ஆத்மா உடலில் இருக்கிறது, உடல் மூலம் வேலை செய்கிறது, மற்ற அனைத்தையும் செய்கின்றது. ஆத்மா குழந்தை ஆவார், அவர் பரமாத்மாவிற்கு சொந்தமானவர் ஆவார். அவர் ஒருவரே ஆவார், அவர் பிரம்மாவின் உடலில் வருகின்றார். பாபா மரம், சக்கரம் மற்றும் ஏணிப்படி படத்தில் எங்கு இருக்கின்றார்? சகோதரர் விஸ்வ ரத்தன் கல்பமரத்தின் படத்தை உருவாக்கினார். நாங்கள் இரவு முழுவதும் இலைகளுக்கு வர்ணம் தீட்டிகொண்டிருந்தோம். நாம் அதை கைகளால் செய்தோம்.
மரத்தின் விதையோடு, மரத்தின் அஸ்திவாரத்தில் நான் இருப்பதும், அதற்கு மேல் வரவிருக்கும் பொற்காலத்தையும் நான் பார்க்கும் அந்த நாள் இறுதியில் வந்துவிட்டது. பொற்காலத்தில் வரப்போகும் ஆத்மாக்கள் யார்…..ஒரு பற்றற்ற பார்வையாளராக இதை எனக்கு சொல்லுங்கள். அஸ்திவாரத்தை காட்டப்பட்டுள்ளவர்கள் நாம். மூதாதையர் ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்துவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது நமக்கு தெரியாது. முன்னமே நிச்சயிக்கபட்ட நாடகம் எப்படி ஆக்கபட்டிருக்கிறது என்று பாருங்கள். கடவுள் எப்படி வந்து, நம்மை அவரோடு ஒரு பங்கை நடிக்க செய்தார் என்று பாருங்கள்! அவர் நம்மோடு இருப்பதாக அவர் கூறுகின்றார். நாம் பற்றற்ற பார்வையாளர்கள் ஆகிவிட்டோம். நாள் முழுவதும், நாம் விடுபட்டு, பார்வையாளர்களாக இருந்து, அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றோம். எப்போதும் மற்றவர்களை கேள்வி கேட்பதில்லை அல்லது விமர்சிப்பதும் இல்லை. நான் யார்? நான் கேள்விகள் கேட்பதன் மூலம் சத்யுகத்தில் வரப்போகின்றேனா? உங்கள் இதயம் என்ற கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள், உள்ளுக்குள் எவ்வளவு பாவம் மற்றும் புண்ணியம் இருக்கிறது என்று பார்ப்பீர்கள். ஞானம் மற்றும் யோகத்தை சுயத்திற்குள் வரவழியுங்கள்.
இப்போது நாம் முற்றிலுமாக ஆத்மா உணர்விற்கு வந்துவிட வேண்டும். நாம் உடல் உணர்வில் வரும்போது நம்முடைய ஸ்திதி தளம்பல் அடையும். நிராகாரமான அந்த ஒருவரை போன்று நாமும் நம்பிக்கை பொறுப்பாளராக (டிரஸ்டியாக) இருக்க வேண்டும். அது ஒரு குண்டுசியாக இருந்தாலும், என்னுடையது எதுவும் இல்லை. என்னிடம் வெள்ளை உடைகள் இருக்கின்றன, வெற்று பை இருக்கின்றது. நான் பாபாவை போல் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றேன். என்னுடைய பாபா, இனிமையான பாபா, அழகான பாபா, நன்றி பாபா என்று நாம் கூறுகின்றோம். உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் சந்தோஷம் உள்ளது. பாபாவின் மீதும், அனைவர் மீதும் சுயத்தின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
இறுதியாக மேலும் ஒரு விஷயம், முழு உலகத்திற்கும் நாம் பாபாவின் செய்தியை கொடுக்க வேண்டும். யார் செய்தியை கொடுக்க போகின்றார்கள்? பாபாவின் அனுபவம் உள்ளவர்கள். இங்கு இருபவர்களில் யார் அதை செய்ய போகிறீர்கள்? பாபா நிராகாரமானவர், தேவதை மற்றும் சாகாரமாக இருக்கின்றார். சாகார ரூபத்தில் அவர் நமக்கு முன் வந்தார். நான் ஏன் பாபாவை பார்க்கின்றேன்? அவரது கண்கள் திறந்திருக்கின்றன, அதில் ஒளி இருக்கிறது. ஒளியையும் சக்தியையும் எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்தும் சரியாகிவிடும். ஒளி என்றால் வெளிச்சமும் எடையற்றதன்மையும் ஆகும். நாம் தேவதைகள் போல் இருக்க வேண்டும், அவர்களின் பாதங்கள் தரையை தொடுவதில்லை.
என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி இருக்கிறது. பிரிஜ் கொட்டியில் ஒரு மாடி படிக்கட்டு இருந்தது, அங்கு நான் உட்காரும் ஒரு பகுதியும் இருந்தது. பாபா மேலே இருப்பார். பாபா எங்கள் கால்களை மேலே வைத்து, உள்ளங்கால்களை காட்ட சொல்வார். பக்தர்கள் தெய்வங்களின் பாதங்களைத் தொட்டுவார்கள். இப்போது கூட அவ்வாறு கால்களை தொட்டு வணங்காமல் இருப்பதை சிலரால் தவிர்க்க முடியாது இருக்கிறது, இது போன்று பலர் உள்ளனர், ஞானம் நிறைந்த சிலர் கூட இப்படி இருக்கின்றார்கள்.
தாங்கள் பல மில்லியன் மடங்கு அதிர்ஷ்டசாலிகள் என்று யார் சொல்ல முடியும்? ஒரு பூஜ்யம் வைத்து அவற்றை சேர்த்துகொண்டே இருங்கள். இந்த வழியில் நீங்கள் பாபாவின் பல மில்லியன் முறை அதிர்ஷ்டமான குழந்தைஆகி, ஒரு தேவதை ஆகவிடமுடியும். 8-மணி மாலையில் யார் வர போகிறார்கள் என்று தாதி குல்ஜாரிடம் நான் கேட்டேன்? ஞானத்தில் காலத்தாமதமாக வருபவர் கூட வரமுடியும் என்று பாபா கூறுகின்றார். கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது என்று நான் கூறினேன். நீங்கள் 8-மணிமாலையில் வரவிரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்! குறைந்தது வெற்றி மணிமாலையில் ஒருவராகவாவது வரவேண்டும். வைரத்திற்கும் முத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஹீரோ நடிகர்கள், வைரங்கள் ஆவார்கள். நீங்கள் ஒரு உண்மையான தங்க மோதிரத்தில் ஒரு வைரத்தை வைப்பீர்கள். ஒரு முத்து நெக்லசில் வைக்கப்படுகிறது, அவை அனைத்தும் ஒரே சமமாக இருக்க வேண்டும். ஒரு வைரமானது குறைபாடின்றி இருக்க வேண்டும். யார் இந்த முயற்சியை செய்து வருகிறீர்கள்? நீங்கள் அனைவரும் மிக மும்முரமாக இருக்கின்றீர்கள். ஆனால் அவ்விதமான முயற்சியை செய்ய வேண்டாம் என்று ஒருவேளை நீங்கள் சோம்பேறிகளாக கூட இருக்கலாம். நீங்கள் சேவையில் மும்முரமாக இருப்பதை நான் பார்க்கின்றேன், அதை நான் நல்லது என்றே சொல்கின்றேன், ஆனால் 'கடவுள்!' எங்கே? ஒரு பக்கத்தில் கடவுள் மறு பக்கத்தில் உங்கள் அதிர்ஷ்டமும் சேவையும் ஆகும். உலகம் முழுவதும் வெவ்வேறு ரூபங்களில் சேவை நடக்கிறது.
என்னுடைய பொழுதுபோக்கு யாருக்குவேண்டுமோ அவர்களுக்கு சிமிக்க்ஷை கொடுப்பதாகும், அனைவரும் பாபாவின் உணர்வுவை பெற்ற வேண்டும் என்பதாகும். என் அறையில் யார் இருந்தாலும் அவர்கள் பாபாவை அனுபவம் செய்யவேண்டும். என்னுடைய திருஷ்டி பிரபஞ்சத்தை அடைய வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
நீங்கள் சந்திக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். மகிழ்ச்சியை விட, அதிகமாக ஊட்டமளிப்பது எதுவும் இல்லை. முத்துக்கள் மற்றவர்களை தங்களை போல் ஆக்குகின்றனர். வெற்றி மணிமாலை 108-மணிகளை கொண்டது. மகத்தான சத்தியமும், தூய்மையும் ஆழமான நேர்மையும் உள்ளுக்குள் இருக்கவேண்டும். சிலர் புரிந்துகொள்வதில்லை, விதிகளையும் பின்பற்றுவதில்லை. அவர்கள் அமிர்தவேளை செய்வதில்லை, முரளி வகுப்பிற்கும் வருவதில்லை. பின்பற்றுவதற்கு நமக்கு பொறுமை வேண்டும். உங்கள் வேலையை நிர்வகிக்க, மற்ற அனைத்து வகையான விஷயங்களையும் சமாளிக்க நாம் மிகவும் இனிமையானவர்களாக, பொறுமையாக, இருந்து விரைவாக காரியங்களை செய்ய கூடியவர்களாக இருக்கவேண்டும். நாம் பணிவுடன் இருக்கும்போது நம்மிடம் பொறுமை இருக்கும். உண்மை இருக்கும்போது நாம் பணிவுடன் நடப்போம். பொறுமையும், பணிவுத்தன்மையும் இருக்கும்போது இனிமை வரும்.
ஓம் சாந்தி