01.04.20

இன்றைய சிந்தனைக்கு

சாந்தம்:

உண்மையான வெற்றியானதுகுழப்பமான சூழ்நிலைகளிலும் மனதை அமைதியாக வைத்திருப்பதில் அடங்கியிருக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுற்றிலும் குழப்பம் சூழ்ந்திருக்கும்போது நம்பிக்கையற்ற உணர்வுகளை கொண்டிருப்பதும் எதிர்மறையான விதத்தில் எதிர்த்து செயல்படுவதும் சுலபமானதாகும். அவ்வாறான நடத்தையை நியாயப்படுத்துவதற்கு நாம் வழக்கமாக பல காரணங்களை கண்டுபிடிக்கின்றோம்.  ஆனால் அவ்விளைவை பற்றி நாம் நேர்மறையாகவோ அல்லது சந்தோஷமாகவோ உணருவதில்லைமேலும் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவற்றை அடக்குவதும் வெற்றி ஆகாது.

செயல்முறை:

ஏதாவது தவறாக நடக்கும்போதுஅமைதியாக இருந்து சூழ்நிலையில் மறைந்துள்ள நன்மைகளை பார்ப்பதற்கு நான் திறந்த மனதோடு இருப்பது அவசியமாகும். அதன்பின் என்னால் கற்றுக்கொள்வதை ஏற்றுகொள்ள முடியும். இது நேர்மறையான உணர்வுகளை உருவாக்குவதோடுபிரச்சனைக்கு தீர்வு காண எனக்கு உதவி செய்யும். நான் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக மாற்றுவேன்.