03.03.20
இன்றைய சிந்தனைக்கு
சமநிலை
உறுதியாக இருப்பதற்கும் அன்பிற்கும் இடையில் சமநிலை வகிப்பது மற்றவர்களிடம் மாற்றத்தை கொண்டுவரும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் மற்றவர்களிடம் மாற்றத்தை கொண்டுவருவதற்கு விரும்பும்போது, நாம் உறுதியாக பேசுவது அவசியம். ஆனால் சில சமயங்களில், நாம் இந்த உறுதித்தன்மையை சரியான மனோபாவத்துடன் சேர்க்காதபோது, இந்த உறுதித்தன்மை மரியாதையற்றதன்மையாக வடிவம் எடுக்கின்றது.
செயல்முறை:
ஒருவர் மாறுவதற்கு நான் உதவி செய்ய விரும்பும்போது, நான் உறுதியாகவும் அதே நேரத்தில் அன்பாகவும் இருப்பது அவசியம். இவ்விதத்தில் சமநிலையில் இருக்கும்போது, என்னுடைய வார்த்தைகளும் செயல்களும் மற்றவரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு, நான் விரும்பிய முடிவை என்னால் சுலபமாக கொண்டுவர முடிகின்றது.