05.03.20

இன்றைய சிந்தனைக்கு

சுய-கட்டுப்பாடு

எஜமானாக இருப்பதென்றால் ஒருவர் தன்னுடைய சொந்த பலவீனங்களிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும் நம்முடைய சொந்த பலவீனங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் நாம் இருக்கின்றோம். குறிப்பாக கடினமான சூழ்நிலைகள், நம்மிடம் உள்ள மோசமானவற்றை வெளிக்கொண்டுவர முனைகின்றன. நம்முடைய பலவீனங்கள் நம்மை வெற்றிகொள்ளும்போது, அந்த எதிர்ப்பை மீறி விடாமுயற்சியுடன் செயல்படுவதைக் காட்டிலும், நாம் அநேகமான சமயங்களில் முயற்சி செய்வதை விட்டுவிடுகின்றோம்.

செயல்முறை:

நான் ஒரு எஜமான் என்ற உணர்வை நான் வளர்த்துக்கொள்வது அவசியமாகும். என்னுள் இருக்கும் பலவீனங்கள் என்னுடைய சொந்த படைப்பு என்பதால் அது முற்றிலும் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இந்த உணர்வை நான் வளர்த்துக்கொள்ளும்போது பலவீனங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக உணர்வதற்கு பதிலாக என்னால் என்னுடைய பலவீனத்தை சுலபமாக வெற்றிகொள்ள முடிகின்றது.