11.03.20
இன்றைய சிந்தனைக்கு
தன்னலமற்றதன்மை
உண்மையான சேவை என்பது எப்பொழுதுமே எதிர்பார்புகளிலிருந்து விடுபட்டு இருப்பது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
மற்றவர்களுக்கு உதவி தேவைப்படுவதை பார்க்கும்போது நாம், அவர்களுக்கு உதவி செய்வது இயற்கை. அந்த கணத்தில் அவர்களிடமிருந்து பதிலுக்கு நாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நமக்கு உதவி அல்லது ஆதரவு தேவைப்படும்போது, நாம் உதவி செய்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்கின்றோம். அவர்கள் பதிலுக்கு உதவி வழங்காதபோது, நாம் பாதிப்படைவதையோ அல்லது ஏமாற்றமடைவதையோ உணரலாம்.
செயல்முறை:
நான் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, அவர்களிடமிருந்து பதிலுக்கு நான் எதையும் எதிர்பார்க்க கூடாது என்பதை எனக்கு நான் நினைவுறுத்திக் கொள்வது அவசியமாகும். நான் கொடுத்த எவ்விதமான உதவியும் சரியான நேரத்தில் எனக்கு திரும்ப கிடைக்கும். நான் விதைத்த விதைகள் வீணாகாது, ஆனால் சரியான நேரத்தில் அவை பலன் கொடுக்கும்.