23.04.20
இன்றைய சிந்தனைக்கு
சுய-கட்டுப்பாடு:
எஜமானாக இருப்பதென்றால் சுதந்திரத்தை அனுபவம் செய்ய முடிவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பொதுவாக, காரியங்கள் தவறான திசையில் செல்லும்போது, பலவீனங்களின் பிடியில் நாம் சிக்கிக்கொண்டிருப்பதை காண்கின்றோம். பலவீனங்கள் நம்மை ஆட்கொள்ள அனுமதிப்பதோடு, அவற்றின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் நம்மை காண்கின்றோம். இதனால் நாம் செய்வதறியாது இருக்கின்றோம். இது நம்மை பாரமாக உணரச் செய்கின்றது. இவ்வாறு தொடரும்போது, நம்முடைய பலவீனத்தை நம்மால் ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது.
செயல்முறை:
என்னுடைய சக்திகளை நான் நினைவுறுத்திக் கொள்வது அவசியமாகும். மேலும் என்னுடைய பலவீனங்கள் என்னுடைய சொந்த படைப்பு என்ற உண்மையையும் நான் நினைவில் கொள்வது அவசியம். அதனால் என்னால் சுதந்திரத்தை அனுபவம் செய்ய முடிவதோடு இச்சக்திகளையும் பயன்படுத்த முடியும். அதன்பின், எவ்வித சூழ்நிலையிலும் நான் சுதந்திரத்தை அனுபவம் செய்வேன்.