25.03.20

இன்றைய சிந்தனைக்கு

சகிப்புத்தன்மை:

எதிர்மறையான உணர்வுகளிலிருந்து விடுபட்டிருப்பதே உண்மையான சகிப்புத்தன்மை ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சகிப்புத்தன்மை என்பது நாம் கடினம் என்று நினைப்பதை ஏற்றுக்கொள்வதாகும். நாம் ஒன்றை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும் போது, நாம் அதிகம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். நாம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கியிருந்தாலும், முயற்சி செய்து சூழ்நிலையை ஏற்றுகொள்கிறோம். இது உண்மையான சகிப்புத்தன்மை அல்ல.

செயல்முறை:

சகிப்புத்தன்மை என்பது, கடினமான சூழ்நிலைகளை சரியான முறையில் கையாள என்னுடைய உள்ளார்ந்த சக்தியை பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு சவாலிலும் என்னை மேம்படுத்திக்கொள்ள நான் முற்படும்போது, நான் முன்னோக்கி செல்கிறேன். நான் என்னை எதிமறை உணர்வுகளிலிருந்து விடுவித்துக் கொள்வதோடு, ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றத்தை அனுபவம் செய்கிறேன்.