25.04.20
இன்றைய சிந்தனைக்கு
மன்னித்தல்:
மன்னிப்பது என்பது கடந்தகால எதிர்மறை சம்பவங்களை மறப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நமக்கு ஒருவர் ஏதாவது தீங்கிழைக்கும் போது, அத்தீங்கை நாம் எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே எப்போதும் பார்க்கும் போக்கு நம்மிடம் உள்ளது. நம்மால் அதை மறக்க இயலாததால், அந்த நபரிடம் நாம் மேற்கொள்ளும் அனைத்து எதிர்கால பரஸ்பர சம்பந்தத்தையும் அது தொடர்ந்து பாதிக்கின்றது. அடுத்தவர் மாற்றமடைந்திருந்தாலும் கூட, அவரைப்பற்றி நாம் கொண்டுள்ள எதிர்மறையான கண்ணோட்டமானது, அவருடைய மாற்றத்தை அவர் தக்கவைத்துக்கொள்வதை சிரமமாக்குகின்றது.
செயல்முறை:
நான் மற்றவர்களுடைய தவறுகளை மன்னித்து, மறக்கின்ற சக்தியை வளர்த்துக்கொள்வதுடன், அவர்களுடைய நேர்மறையான செயல்களை நினைவில் கொள்வது அவசியமாகும். நேர்மறையான சூழலை உருவாக்குவதனால், மற்றவர்கள் தங்களுடைய பலவீனங்களை வெற்றிகொண்டு, அவர்களுடைய ஆற்றலை அறிந்துகொள்வதை நான் சுலபமாக்குகின்றேன்.