27.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

பகுத்தறிவது:

 

பலவீனங்களை பார்ப்பதிலிருந்து விடுபட்டிருப்பது என்பது தொடர்ந்து அமைதியாக இருப்பதாகும்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

 

மற்றவர்களுடைய பலவீனங்களை நாம் அறிந்து கொள்ளும்போதுநாம் அமைதி இழந்திருப்பதை அனுபவம் செய்கின்றோம். நாம் ஒருவருடைய பலவீனங்களை கவனித்தவுடன்அதை புறக்கணிப்பது என்பது நமக்கு சிரமமாக இருப்பதை காண்கின்றோம். மற்றவர்களை மாற்றுவதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என நாம் அறிந்துள்ளோம். நம் கட்டுப்பாட்டை மீறிய எதுவும் மனஅழுத்தத்தை உருவாக்குகின்றது.

 

செயல்முறை:

 

மற்றவர்களுடைய திறமைகளையும்நேர்மறையான பண்புகளையும் கவனிப்பதற்கு முயற்சி செய்வதுஅவர்களுடைய பலவீனங்களை மட்டுமே பார்ப்பதிலிருந்து என்னை விடுவிக்கின்றது. நான் மற்றவர்களுடைய தனித்துவமான பரிசுகள் மற்றும் திறமைகளை பாராட்டி அதனுடன் அதிகமாக தொடர்புகொள்ளும்போதுஎன்னால் அவர்கள் வளர்வதற்கு உதவ முடிகின்றது. இவ்விதத்தில்நான் அனைவருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நேர்மறையான சூழலை உருவாக்குகின்றேன்.