28.04.20
இன்றைய சிந்தனைக்கு
சமநிலை:
அறிவுபூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் சமநிலையோடு சேவை செய்வதென்பது தொடர்ந்து வெற்றியாளராக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் இதயப்பூர்வமாக மட்டும் பணியாற்றும்போது, வெற்றி நிலையற்றதாக உள்ளது. ஆனால் நாம் அறிவுபூர்வமாக நடைமுறைக்கு ஏற்றவாறு மட்டும் சிந்தித்து பணியாற்றும்போது, நாம் அக்காரியத்தை நிறைவேற்றிய போதும் அதில் அழகில்லை.
செயல்முறை:
வாழ்க்கை முழுவதும் வெற்றியாளராக இருப்பதற்கு, நான் அன்பிற்கும் அறிவுபூர்வமாக சிந்திப்பதற்கும் இடையில் சமநிலை பேணுவது அவசியம். நான் அறிவுபூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் சிந்தனை செய்யும்போது, நான் சமநிலை வகிக்கின்றேன். அதன்பிறகு, எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் என்னால் நன்றாக பார்க்க முடிவதால், இது அதிகமான வெற்றிக்கு வழிவகுக்கின்றது.